கருவாச்சி காவியம்.
வைரமுத்துவின் 'கருவாச்சி காவியம்' விகடனில் முடியுறும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் படித்து வருகிறேன். தமிழோடு விளையாடியிருக்கிறார்.
முன்பெல்லாம் நாடாளும் அரசர்களுக்கும், தளபதிகளுக்கும் மட்டுமே வரலாறு என்று ஒன்று உன்டு. 'கருவாச்சி' போன்ற எதார்த்த மனிதர்களுக்கு சரித்திரத்தில், வரலாற்றில் வழ்ந்ததாக ஒரு சுவடு கூட கிடையாது.
வைரமுத்து ஒவ்வொரு நிமிஷமும் கண்ணை மூடி அதில் வாழ்ந்து பின் ஒவ்வொரு வரியையும் எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.
இது போன்ற எதார்த்த படைப்புகள் தான் மனதை வெகுவாக ஈர்க்கின்றன.
ஆதித்தியா
இது எனது சித்தி மகள். குட்டிப் பென் என்றாலும், வாய் 60 வயசு பாட்டியை விட அதிகம் பேசும். சென்ற முறை ஊருக்கு சென்று இருந்த போது, அவள் தனக்கு MS Paint ல் படம் வரைய கற்று தர வேன்டும் என்று கேட்க, நானும் எனக்கு தெரிந்த அரை குறை MS Paint ல், படம் வரைய......
சத்தியமாக நாங்கள் வரைய முயன்றது என்னவொ ஒரு அரண்மனை தான், ஆனால், இந்த குடிசை எப்படி வந்தது என்று எங்க்ள் இரண்டு பேருக்குமே இது வரை தெரியவில்லை... ஹி. ஹி...
Sunday, May 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Nice hut! :-)
BTW, aren't you in WT? I'm sure the picture is taken there though..
Thanks :)
Yes, I am from WT. It was shot there.
Oh, great! :-)
Post a Comment