Wednesday, November 01, 2006

வைரமுத்து-1: காதலித்துப் பார்!

I always wanted to collect the poems by Vairamuthu. I’m thinking of collecting/posting his ‘Best Lyrics’ here eventually. Here is his cool ‘kavithai’ on ‘Kathaliththupaar!’

Note: I just have an audio in which Vairamuthu dictates this ‘kavithai’ -- I’m just listening and typing it in tamil. It might have slight differences.

(feel free to post comments if you dont understand any part! :-) )
----------------------------------------


காதலித்துப் பார்!


காதலித்துப் பார்!


உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம் விளங்கும்
உனக்கும் கவிதை வரும்!
கையெழுத்து அழகாகும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்


காதலித்துப் பார்!


தலையணையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால், நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்து விட்டால், வருஷங்கள் நிமிஷமென்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது - ஆனால்
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உண்ர்வாய்!
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டை ஒன்று
உருளக் காண்பாய்!
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் - எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்


காதலித்துப் பார்!


இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்
நிசப்த அலைவரிசைகளில் உனது
குரல் மட்டும் ஒலி பரப்பாகும்
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை
காமம் கிழிக்கும்
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாரா வாகும்!
தாகங்கள் சமுத்திரமாகும் - பிறகு
கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்


காதலித்துப் பார்!


பூக்களிள் மோதி மோதியே
உடைந்து போக உண்ணால் முடியுமா?
அஹிம்சையின் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே புதைக்கத்தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையய் சபையாக்கவும்
உன்னால் வொன்னுமா?
அத்வைதம் அடையவேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?


காதலித்துப் பார்!


சின்னச் சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே!
அதற்காக வேணும்..
புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே!
அதற்காக வேணும்..
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே!
அதற்காக வேணும்..
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே
அதற்காக வேணும்..


காதலித்துப் பார்!


சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில்
உன் தெருவுகள் களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில் அறையப்பட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்


காதலித்துப் பார்!


சொர்க்கம், நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்


காதலித்துப் பார்!


- வைரமுத்து

No comments: