Sunday, June 18, 2006

9.06.06 முதல் 12.06.06 வரை.















"அது ஒரு தனி உலகம்.
இந்த புவிப்பரப்பில் இன்னொரு கிரகம்..."

- வைரமுத்து.


எப்போது வீட்டுக்குப் போகும் போதும், இந்த வரிகள் தான் ஞாபகம் வந்து போகும்.வெவ்வேறு கால கட்டங்களிள் வெவ்வேறு கனவுகளுடன் வாழ்ந்த வாழ்வை ஒவ்வொரு சுவர்களும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும்.

வாழ்வின் முற்பகுதியில் நான் பார்த்து, நினைத்து, வியந்த சில மனிதர்களை, இடங்களை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைதேன்.

- அதிகாலைத் தாவரங்கள்

- ஒரு சாயங்கால நெடும்பயணம்

- நிலவு வெளிச்சம் படர்ந்து கிடக்கும் மொட்டை மாடி

- வெகு தூரத்தில் தெரியும் ஒற்றைப் பணமரம்

- ஏதோ ஒரு ராஜா, எந்த நூற்றாண்டிலோ கட்டிய பழைய கோவில்கள்

- ஆளிள்லா தேசிய நெடுஞ்சாலைகள்

- ராத்திரியின் வேப்பமரத்து வாசம்

- வளையாமல் செல்லும் ரயில் தண்டவாளம்

இப்படி எத்தனையோ காட்சிகள்; காலம் கடந்து ஞாபகத்திற்குள் பத்திரமாக உறைந்து கிடக்கும் காட்சிகள். ஆனால் ஒவோரு காட்சிகளும் ஒரு முறை தான் போலும். காலப் போக்கிகில் எல்லாம் மாறியிருந்தன.

கோவிலுக்குப் போக வேண்டும் போல தோன்றியது. மதுரைக்குப் போவதென்று முடிவு எடுத்தேன்.

மதுரை -- எனது சிறு வயது கனவு நகரம். நான் பார்த்து வியந்த முதல் நகரம். தனியாக போவதை விட குழந்தைகளையும் கூட்டிச் செல்வதென்று முடிவு செய்தேன்.

மதுரைக்கு 60 KM பயணம். ஜன்னல் அருகே குழந்தைகள்.வழியெல்லாம் மரங்கள், கணவாய்கள், வறண்ட காடுகள் யென்று எத்தனையோ காட்சிகள்.

இப்போதுதான் இந்த பூமியை புதிதாய் பார்ப்பது போல் பார்த்தார்கள் குழந்தைகள். நானும் தான்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்.மேற்கு வெளி வீதி. நேதாஜி ரோடு.ஒரு KM நடந்தோம். முன்பு எத்தனையோ முறை இந்த வீதியில் நடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மதுரை ஒரு பரபரப்பான நகரமாய் இருக்கும். இப்போது அது வாடிப்போய் விட்டதாக தோன்றியது. அவ்வளவாய் ஆரவாரம் இல்லை; பரபரப்பாய் செல்ல ஆட்களும் இல்லை.







கோவிலின் தெற்கு நுழைவாயில் வழியே நுழைந்தோம்.உள்ளே நுழைந்ததுமே ஒரு பழைய வரலாற்றின் கம்பீரம் தெரிந்தது.கோவிலின் உள்ளே செல்ல செல்ல பெரிய பெரிய தூண்களும், சிற்பங்களும், ஓவியங்களும், சிலைகளும் மாறி மாறி ஆச்சர்யமூட்டியது.


அப்படியே கோவிலின் தெப்பக்குளத்தின் நீண்ட படிக்கட்டுகளில் குழந்தைகளுடன் உட்கார்ந்தேன்.

"இந்த கோவிலை எத்தனை பேர் சேர்ந்து கட்டியிருப்பார்கள்?"
"எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்?"
" எவ்வளவு செலவாகியிருக்கும்?" -- என்றெல்லாம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக பல கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்தன.குழந்தைகளுக்கும் அது ஆச்சர்யமாய் தோன்றியிருக்க வேண்டும். என்னிடம் கேட்டே விட்டார்கள்.

"இந்த கோயிலை கட்டினது யார்?" - - இது ஆதித்யா.

"ஒரு பாண்டிய மன்னன் கட்டியது" என்றேன்.

சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் சொன்னேன்.

"இல்லை இல்லை; ஒரு பாண்டிய மன்னன் காலத்தில் வாழ்ந்த அடிமைகள் கட்டியது" என்றேன்.

"இதை கட்ட எவ்வளவு செலவு ஆச்சு?" இது அவளின் அடுத்த கேள்வி.

நான் பதில் யேதும் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்.

"சொல்லுங்க. எவ்வளவு செலவாச்சு? ஒரு கோடி இருக்குமா?" - மீண்டும் கேட்டாள்.

சொன்னேன்.
"அந்த மனிதர்கள் சுத்த்மானவர்கள்; பணம் பற்றி அறியாதவர்கள்.இதன் செலவு: நிறைய உழைப்பு; நம்பிக்கை; கொஞ்சம் ரத்தம்; சில உயிர்கள் - இருக்கலாம்" என்றேன். ஆச்சர்யமாக பார்த்தாள்.

பின்பு வொவ்வொரு சிலையையும் பார்க்கும் போதும், இதே போல் குழந்தைதனமாய் நிறைய கேள்விகள் கேட்டு கொண்டே வந்தாள்.
கோவிலின் ஒரு மையப்பகுதிக்கு வந்து போது ஒன்றைச் சுட்டி காட்டினேன்.







அது 63 நாயன்மார்களின் சிலை.

-- "இவர் தான் மாணிக்க வாசகர்."
-- "இவர் திருமூலர்."
-- "இது ஞன சம்பந்தர்"

என்று ஒவ்வொரு சிலையயும் அறிமுகம் செய்தேன். கோவிலின் ஒரு பகுதியில் 'தேவாரம்', 'திருவாசகம்' என்று நிறைய நூல்களை பார்வைக்காக வைத்திருந்தார்கள். அதை தொட்டுப்பார்த்தேன். ஒரு கணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்தேன்.

இடது மூலையில் சுந்தரேசுவரர் தியான மண்டபம் உள்ளது.தியானம் என்றால் என்ன வென்று கேட்டாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"இறந்த காலம், எதிர் காலம் இரண்டையும் மறந்து விட்டு, ஒரு நிமிடம் நிம்மதியாக கண்ணை மூடு" -- என்றேன்.

ஒரு வழியாக கோவிலை விட்டு வெளியெ வந்தோம். ஏனோ, மனது கணத்தது. "இப்படி வாழ வேண்டிய வாழ்க்கயை இங்கே மிச்சம் வைத்து விட்டு, எங்கெங்கோ தேடுகிறோமே!" என்று மனசாட்சி கேட்டது.

"ஏதேனும் ஒன்றை சர்ந்திரு.
கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதம் - இப்படி
எதையேனும் ஒன்றை சார்ந்திரு.
இல்லையேல் இந்த உலகம் காணாமல் போய்விடும்"

யாரோ சொன்னது... மனது லேசாய் தலையசைக்கிறது...

6 comments:

prabs said...

Mani,I njoy reading ur blog ;) nice one again.

Jeya said...

i dont know what to say. i think you are really enjoyed. nice one to read.

Manivannan P said...

yeah, I have been longing for writing such kind of thoughts here. thanks again.

Sumithra said...

Good writing! A little emotional I guess :-). I liked the quote (Vairamuthu's) - he's one of the very few Tamil writers who can really write.

Manivannan P said...

yes sunshine. i am thinking to drop a post on vairamuthu here for so long. lets see.

பரத் said...

//"ஏதேனும் ஒன்றை சர்ந்திரு.
கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதம் - இப்படி
எதையேனும் ஒன்றை சார்ந்திரு.
இல்லையேல் இந்த உலகம் காணாமல் போய்விடும்"//

beautiful kavithai...written by vanna nilavan..
nice post