
(உண்மைச் சம்பவம்....)
ஒரு நாள் பாரதியார், ஊரில் தண்டோரா போடுபவனை அழைத்து, "சாகமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி" என்பது பற்றி தான் பேசப்போவதாகவும், அதனால் ஊர் மக்கள் எல்லோரையும் ஊர்த் திடலில் மாலை 5 மணிக்கு கூடும் படியும் அறிவிக்கச் சொன்னார். அவனும் ஊரில் சென்று, எல்லா தெருக்களிலும் அவ்வாறே அறிவித்தான்.
பொது மக்கள் மாலையில் ஊர்த்திடலில், பாரதியாரின் அந்த பேச்சை கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் பாரதியார் அங்கு வந்தார். திடலில் ஒரு கல் மீது ஏறி நின்றார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.
"சாகாமல் இருப்பது எப்படியென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதெற்கெல்லாம், முதலில் உயிரோடு யிருக்க வேண்டுமே! எப்பொழுதும் அடுத்தவரைப் பற்றியே குறை பேசி காலத்தைக் கழிக்கும் நீங்கள் எல்லாம், ஏற்கனவே இறந்த பிணங்கள் தான்!" - என்று பேசி விட்டு, இறங்கி வேகமாக நடந்து போய் விட்டார். பொது மக்கள் அவரை கிறுக்கன் என்று திட்டிக் கொண்டே சென்றதை என் காதால் கேட்டேன்.
---
( -- ஆனந்த விகடனின் ஒரு கட்டுரையிலிருந்து..)
யாருக்கு வரும் இந்த தைரியம்? யார் இப்படி மனதில் தோன்றியதை அப்படியே சொல்லியிருக்க முடியும்?
பாரதியார்!
அவர் ஒரு கவிஞர் என்பதையெல்லாம் தவிர்த்து, தன் விருப்பப்படியே கடைசி வரை வாழ்ந்த ஒரே மனிதன் என்பதால் அவரை பிடிக்கும்.
மற்றவர் போல், சமுதாயத்தை திருத்த முயற்சிக்காமல், அதனை கேலியும் கிண்டலும் செய்தே திருத்திய ஒரே மனிதன் என்பதாலும் பிடிக்கும்.
பிராமண குடும்பத்தில் பிறந்த போதும், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு வித்தியாச மனிதன்.
வயிற்றுக்கே சோறில்லாமல் இருந்த போதும், பறவைகளுக்கு இரை போட்டு ரசித்த ஒரு கவிஞன்.
கோபம் வந்தால் கடவுளையே திட்டி கவிதை எழுதியவன்! வெள்ளைக் காரர்களுக்குத் தமிழ் தெரியாததால் தப்பித்தார்கள்!
இங்கு கவிஞர்கள் உண்டு. மீசை வைத்தவர்கள் உண்டு. கிறுக்கர்களும் உண்டு. ஆனால், எங்கு போய் பார்ப்பது? இன்னொரு பாரதியை!
4 comments:
good post..
thank god now only i can able to read your post da. nice one
thanks loosu. :-)
நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com
Post a Comment