Tuesday, December 19, 2006

ஆசை இருக்கும் வரை.

ரெண்டு, மூனு வருஷத்துக்கு முன்னாடி, என்னோட தேவைகள்(/ஆசைகள்) எல்லாமே இவ்வளவு தான்:

1. சொந்தமாக ஒரு computer, கொஞ்சம் internet bandwidth.
2. இரண்டு வேளை மட்டும் சாப்பாடு
3. நெனைக்கும் போதெல்லாம் Coffee.

அது எல்லாமே இப்போ நடந்திடுச்சு. நடந்து முடிஞ்சிடுச்சு. அதற்காக மட்டும் இல்லை. இத்தன நாள் இல்லாதா வாழ்க்கையா இந்த வாழ்க்கை தெரியுது.இப்போ, இந்த நிமிஷத்துல, மனசு ரொம்ப நிம்மதி ஆகிடுச்சு.

எத்தனை வருஷம்? எத்தனை பிரச்சனைகள்? முடியுமா? முடியாதா? என்றைக்காவது ஒரு நாள் இந்த மாதிரி நான் நினைத்துப் பார்ப்பேனா?

இதோ, இப்போ நினைத்துப் பார்க்கிறேன்.

எந்தப் பிரச்சனையும் ஒன்றும் செய்யலையே...... கடைசி வரை தீராததென்று எதுவும் இல்லையே..... முடியாமலே போனதேன்று ஒன்னுமே இல்லயே.....

இதனால், இனிமேல் வாழ்வில் பயம், வாழ்க்கையை பற்றிய பயம் எல்லாம் ரொம்ப கொறஞ்சிடுச்சு.

கடவுளுக்கு நன்றி சொல்வதை விட, இத்தனையையும் கற்றுக் கொடுத்த என் பாசத்திற்குறிய 'தவறுகளுக்கும்', முகம் பார்த்த/ பார்த்திடாத 'மனிதர்களுக்கும்' நன்றி சொல்ல வேண்டும்.

4 comments:

  1. Great! :-)

    But you shd eat 3 meals a day :-)

    ReplyDelete
  2. yeah, I was such a careless guy. I didnt like food very much, than coffee.

    ReplyDelete
  3. Anonymous2:26 PM

    In the last line you are mentioning me also right ?
    Thanks for wishing me mani

    Regards,
    Senthur

    ReplyDelete
  4. Oops! nice seeing you in places like here! :-)
    btw, how is life?

    ReplyDelete